Sunday, 17 March 2013

இராவணன்


இராவணன்

இராவணன் பெயரிலுள்ள மருத்துவ நூல்களில் சில சிங்கள மொழியின் வழக்கில் இருந்து வருகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் எழுதப்பட்ட வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம் ( Vaidya cintamani Bhaisadya sangrahava ) என்னும் நூல் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப் பட்டதாகும்.
இராவணனின் நாடிப் பரிட்சை (Nadi Pariksha), அர்க்கப் பிரகாசம்(Arka Prakashata ), ஒடிஷா சிகிட்ஷா (Uddisa Chiktsaya ), ஒடியா சிகிட்ஷா (Oddiya Chikitsa), குமார தந்த்ரயா (Kumara Tantraya ), வாடின பிரகாரனயா (Vatina Prakaranaya ) என்னும் நூல்கள் சிங்கள மொழியில் இயற்றப்பட்டு பின்னர் சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டன என்று (சிங்) கள எனும் இயக்கத்தைத் தோற்றுவித்த முனிதாச குமாரதுங்க கூறியுள்ளார்.
தாஸிஸ் இராவணன் என்னும் பெயருடையவன் அரசனாக, இராவணன் ‘அங்கவெட்டு’ எனப்படும் வர்மக்கலை, மருத்துவக்கலை, இசைக்கலை போன்ற பல கலைகளில் சிறந்து விளங்கியவனாக விளங்கினான் என்று சிங்கள மொழியின் தொன்மை நூலாகிய இராஜவலியா மற்றும் இராவண வலியா என்னும் நூல்கள் புகழ்ந்துரைக்கின்றன.
இராவணன் என்று பதினோரு பேர் இருந்துள்ளனர். அவர்களில் நள இராவணன், மனு இராவணன், புனு இராவணன், தாஸிஸ் இராவணன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களில் தாஸிஸ் இராவணன் என்பவனுக்குப் பத்துவகையான ஆற்றல்களுடன் பத்து நாடுகளை ஆண்டான். அதனால் அவன் பத்துதலை இராவணன் என்று அழைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது.
மன்னன் தாஸிஸ் இராவணன் கி.மு. 2554 – 2517 என்னும் காலத்துக்கு உரியவன். இவன் சிங்கள இனத்தின் பழங்குடி இனத்தவன். அங்கவெட்டு வீரன். மண்டோதரியின் கணவன் என்று சிங்கள வரலாறு கூறுகிறது.
இந்திய – ஆரியர்களின் கலப்பினத்தவர்களான சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து (ஒரிசா) இலங்கைக்குக் குடிபெயர்ந்ததே கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தான். அவ்வாறிருக்கும் போது சுமார் 5000 ஆண்டுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் இராவணன் சிங்களன் என்றும் அவன் சிங்கள மொழியில் நூல் இயற்றினான் என்றும் சிங்கள இனத்தின் பழங்குடியைச் சார்ந்தவன் என்றும் கூறுகின்ற சிங்களர் வரலாறு, வரலாற்றுப் புரட்டு என்பது தெளிவாகிறது.
இரச சாஸ்திரம் என்னும் தமிழ் மருத்துவ நூலை சமஸ்கிருத்த்தில் எழுதி வைத்துக் கொண்டு இரச சாஸ்திரம் தங்கள் சாஸ்திரம் என்று கூறிக் கொள்கின்ற ஆயுர் வேதர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால், இந்திய – ஆரியக் கலப்பினால் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியர்களும் சிங்களர்களும் இலங்கைக்குச் செல்லுமுன்பே ஆயுர்வேதம் இலங்கைக்கு எப்படி வந்தது? 5000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்த மருத்துவம் ஆயுள்வேதம். அதுவே தமிழ் மருத்துவத்தைக் குறிக்கும் பழஞ்சொல் என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்றாகிறது.

No comments:

Post a Comment