Saturday, 27 April 2013

மூலாதாரம் முதல் நாபி அந்தம்


மூலமுதல் நாபிஅந்தம் கோடகலை ; நாபி
முதல் இதயாந்தம் மேதை ; இதயம் முதல் கண்டத்து
ஏலும் அருக்கீசம் விடம் கண்ட முதல் நாலு
இரந்துரத்துள் புருவ நடு விந்து ; நடு முதலாம்
சால்பிரம் ருத்திரமட்டு அர்த்த சந்த்ரன் ; நிரோதி
தருநாதம் ; நாதாந்தம் தானாகும் , இவைமேல்
கோலமுதல் துவாததசாந் தத்து அளவும் சந்தி
குலவு வியாபினி சமனை உன்மனையும் குறிப்பாய்;

பண்புறு மூலாதாரம் முதல் நாபி அந்தம்
பயில்கோட கலத்தானம் பன்னிரெண்டு அங்குலமே
நண்புதரு நாபிமுதல் இதயாந்தம் மேதை
நவிலும்விரல் பன்னிரெண்டாம்; நல் இதயம் முதலாம்
கண்டாந்தம் அருக்கீசம் அங்குலம் ஏழ்காட்டும்;
கண்டம் முதல் தாலு இரந்திர அந்தம் காணில்
கொண்ட விட கலைத்தானம் அங்குலம் நாலாகும்
கொடும்புருவ நடுவிந்துத் தானம் ஓரங்குலமே.

புருவ நடு முதல் பிரம ருத்திரம் மட்டாகப்
பொருந்தும் அர்த்தசந்திரனே முதல்புகல் நாலினுக்கும்
பெருகிடும் ஒவ்வொன்றுக்கும் மும்மூன்றாய் மருவப்
பேசும்விரல் பன்னிரண்டாம் பிரமாந் திரத்துக்கு
உரியசந்தி யங்குலமொன்று, உயர்ந்த வியாபினிக்காம் ஒரு
மூன்று; சமனைக்கும் ஒரு நான்கு உன்மனைக்கே
வரு நான்கு அங்குலம் ஆகத்தானம் இவை; ஒன்பான்
மதித்திடும் அங்குலம் அறுபானம் வழுத்துங்காலே.

மேதை முதல்மூன்று கலைமுடிவினில் ஒன்றாகும்
விந்துக்கலை முதன்மூன்றும் முடிவினில் ஒன்றாகும்
நாதம் முதல் மூன்று கலை முடிவினில் ஒன்றாகும்
நண்ணு வியாபினிக்கும் ஒன்று நான்காவததுவே
ஓதுச மனைக்குச் சூனியம் ஒன்றே ஆகும்.
உரைப்பதும் ஐந்தாவது எனும் உன்மனைக்கும் ஒன்றாம்
பேதமறு சூனியம் ஆறாகும்; அதன்மீதே
பெரியபரம் இருக்கும் எனப் பேசுவர் நல்லோரே!

இப்பாடல்களின் பொருளினை அட்டவணைப்படுத்தி கொடுத்துள்ளேன்.

கலை நிறம்அதி தேவதை
6 ஆம் சூனியம்
உள்மனைக் கலைஇருள் போன்றதுசிவன்
5 ஆம் சூனியம்
சமனைக் கலைகோடி சூரியர் ஒளிசிவன்
  4 ஆம் சூனியம்
வியாபினிக் கலைஆயிரம் சூரிய ஒளிகள்சிவன்
 3 ஆம் சூனியம்
சத்திக் கலை நூறு சூரிய ஒளிகள்சிவன்
 நாதாந்தக் கலைஇரு மின்னல் இணைந்த்தாம்சதாசிவம்
 நாதக் கலைமாணிக்க ஒளிசதாசிவம்
 2 ஆம் சூனியம்
 நிரோதினிக் கலைபுகை நிறம்சதாசிவன்
அர்த்த சந்திரன் கலைகூரிய வாள் ஒளிசதாசிவன்
விந்துக் கலைவிளக்குச் சுடர்மகேஸ்வரன்
 1  ஆம் சூனியம்
விட கலைமின்னல் ஒளிருத்திரன்
அர்க்கீசக் கலைசூரிய சந்திர்ர் கூடிய ஒளிதிருமால்
மேதைக் கலைஎரியும் தீக்கொழுந்துபிரம்மா

No comments:

Post a Comment