குடிநீர் பற்றிய ஆறு மூட நம்பிக்கைகள்..
கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள் இவ்வுலகில் அதிகம் உள்ளது. இத்தகைய கட்டுக்கதைகளால் மக்கள் பலர் உண்மை எது, நன்மை எது என்று தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஒருவர் உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்று தண்ணீர். உணவு கூட இல்லாமல் உலகில் வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. இத்தகைய தண்ணீர் தாகத்தை மட்டும் தணிக்க பயன்படுவதில்லை. பொதுவாக தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. அதிலும் ஒருநாளைக்கு அதிகப்படியான அளவில் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் வறட்சி நீங்கி, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் நன்கு பொலிவோடு இருக்கும் என்பதாலேயே. ஆனால் அத்தகைய தண்ணீரை குடிப்பதால் உண்டாகும் உண்மையான நன்மை என்னவென்று தெரியாமலேயே, பல கட்டுக்கதைகள் மூலம் நீரின் நன்மையை பலர் நம்பி வருகின்றனர். இப்போது அந்த தண்ணீரை பற்றிய மிகவும் பிரபலமான சில கட்டுக்கதைகள் என்னவென்று பார்ப்போமா!!!
கட்டுக்கதை-1
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனை ஏற்படும் என்பது. ஆனால் இதனை எந்த ஒரு ஆய்வும் நிரூபிக்கவில்லை. உண்மையில், தண்ணீரைக் குடித்தால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிக்கலாம். எனவே இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொள்ளுங்கள்.
கட்டுக்கதை-2
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைப்பது. மிகவும் பிரபலமான ஒன்று என்றால் இது தான். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கும், நீரைக் குடிப்பதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மேலும் எந்த ஒரு நிரூபணமும் இல்லை. அதிலும் மருத்துவர்கள் தாகம் எடுக்கும் போது மட்டும் தான் தண்ணீர் குடிக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.
கட்டுக்கதை-3
உடலில் உள்ள டாக்ஸின்களை சிறுநீரகங்கள் நன்கு செயல்பட்டு வெளியேற்றிவிடும் என்று சொல்வது. உண்மையில் அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகத்தின் சீரான இயக்கமானது தடைபடும்.
கட்டுக்கதை-4
ஆரோக்கியமான சருமத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது. அனைவரும் நினைக்கும் ஒன்றில் இதுவும் ஒன்று. பொதுவாகவே உடலில் 60% தண்ணீர் இருப்பதால், இன்னும் அதிகமான அளவில் தண்ணீர் குடித்தால், சருமம் பொலிவோடு இருக்கும் தான். ஆனால் அது மட்டும் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளாது.
கட்டுக்கதை-5
உடற்பயிற்சி செய்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று நினைப்பது. இதற்கு காரணம், உடற்பயிற்சியின் போது உடலில் வறட்சி ஏற்படும் என்பதால் தான், தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் உண்மையில் உடற்பயிற்சி செய்தால், உடலில் உள்ள அசுத்த நீர் தான் வெளியே வருமே தவிர, வறட்சி ஏற்படாது.
கட்டுக்கதை-6
தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று சொல்வது. உண்மையில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடும். எனவே அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதனால் தான் உடல் எடையானது குறைகிறது.
Sunday, 24 March 2013
Sunday, 17 March 2013
இராவணன்
இராவணன்
இராவணன் பெயரிலுள்ள மருத்துவ நூல்களில் சில சிங்கள மொழியின் வழக்கில் இருந்து வருகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் எழுதப்பட்ட வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம் ( Vaidya cintamani Bhaisadya sangrahava ) என்னும் நூல் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப் பட்டதாகும்.
இராவணனின் நாடிப் பரிட்சை (Nadi Pariksha), அர்க்கப் பிரகாசம்(Arka Prakashata ), ஒடிஷா சிகிட்ஷா (Uddisa Chiktsaya ), ஒடியா சிகிட்ஷா (Oddiya Chikitsa), குமார தந்த்ரயா (Kumara Tantraya ), வாடின பிரகாரனயா (Vatina Prakaranaya ) என்னும் நூல்கள் சிங்கள மொழியில் இயற்றப்பட்டு பின்னர் சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டன என்று (சிங்) கள எனும் இயக்கத்தைத் தோற்றுவித்த முனிதாச குமாரதுங்க கூறியுள்ளார்.
தாஸிஸ் இராவணன் என்னும் பெயருடையவன் அரசனாக, இராவணன் ‘அங்கவெட்டு’ எனப்படும் வர்மக்கலை, மருத்துவக்கலை, இசைக்கலை போன்ற பல கலைகளில் சிறந்து விளங்கியவனாக விளங்கினான் என்று சிங்கள மொழியின் தொன்மை நூலாகிய இராஜவலியா மற்றும் இராவண வலியா என்னும் நூல்கள் புகழ்ந்துரைக்கின்றன.
இராவணன் என்று பதினோரு பேர் இருந்துள்ளனர். அவர்களில் நள இராவணன், மனு இராவணன், புனு இராவணன், தாஸிஸ் இராவணன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களில் தாஸிஸ் இராவணன் என்பவனுக்குப் பத்துவகையான ஆற்றல்களுடன் பத்து நாடுகளை ஆண்டான். அதனால் அவன் பத்துதலை இராவணன் என்று அழைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது.
மன்னன் தாஸிஸ் இராவணன் கி.மு. 2554 – 2517 என்னும் காலத்துக்கு உரியவன். இவன் சிங்கள இனத்தின் பழங்குடி இனத்தவன். அங்கவெட்டு வீரன். மண்டோதரியின் கணவன் என்று சிங்கள வரலாறு கூறுகிறது.
இந்திய – ஆரியர்களின் கலப்பினத்தவர்களான சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து (ஒரிசா) இலங்கைக்குக் குடிபெயர்ந்ததே கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தான். அவ்வாறிருக்கும் போது சுமார் 5000 ஆண்டுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் இராவணன் சிங்களன் என்றும் அவன் சிங்கள மொழியில் நூல் இயற்றினான் என்றும் சிங்கள இனத்தின் பழங்குடியைச் சார்ந்தவன் என்றும் கூறுகின்ற சிங்களர் வரலாறு, வரலாற்றுப் புரட்டு என்பது தெளிவாகிறது.
இரச சாஸ்திரம் என்னும் தமிழ் மருத்துவ நூலை சமஸ்கிருத்த்தில் எழுதி வைத்துக் கொண்டு இரச சாஸ்திரம் தங்கள் சாஸ்திரம் என்று கூறிக் கொள்கின்ற ஆயுர் வேதர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால், இந்திய – ஆரியக் கலப்பினால் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியர்களும் சிங்களர்களும் இலங்கைக்குச் செல்லுமுன்பே ஆயுர்வேதம் இலங்கைக்கு எப்படி வந்தது? 5000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்த மருத்துவம் ஆயுள்வேதம். அதுவே தமிழ் மருத்துவத்தைக் குறிக்கும் பழஞ்சொல் என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்றாகிறது.
பங்குனி உத்திர வழிபாடு
மாற்றங்கள் அருளும் பங்குனி உத்திர வழிபாடு
மகேசனால் உண்டான மாதங்கள் பல வந்தாலும் பங்குனியில் வரும்
உத்திரநட்சத்திரம் மகத்துவம் வாய்ந்த இந்துக்களுக்குரிய அற்புத
திருநாளாகும்.ஏனெனில் இந்த அற்புத நாளில்தான் சிவன் பார்வதி திருமண
கயிலாயத்தில் நடைபெற்றதாக புராணங்கள் உரைக்கின்றன. தமிழ் கடவுளாம் ஸ்ரீ
முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திர திருநாள் தமிழகமெங்கும்
கொண்டாடப்படுகிறது. மங்கலகரமான பங்குனி உத்திர திருநாளில்தான்
முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணமும், ரங்கநாதர் ஆண்டாள்
திருமணம்,தேவேந்திரன் இந்திராணி திருமணம் ,பிரம்மா சரஸ்வதி திருமணம்
,தசரதபுதல்வர்கள் திருமணம் ஆகிய திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள்
கூறுகின்றன. இறைவனுக்கே திருமணம் நடந்த பங்குனி உத்திர திருநாள் இந்த
வகையில் விஷேசமானது. மற்றொரு வகையில் சில தெய்வ அவதாரங்கள் இந்த இனிய
நாளில் அவதரிதிருக்கிறனர் . அவர்கள் வள்ளி,ஐயப்பன்,அர்ஜுனர் ஆகியோராவர்
. திருமுருகப்பெருமானின் திருக்கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று
மிகுந்த விஷேசமான நாளாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் வள்ளி
தெய்வானை திருக்கல்யாணம் , மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் ஆகிய
திருத்தலங்களில் விஷேச நிகழ்வுகள் நடைபெறும் . ரதியின் வேண்டுதலுக்காக
சிவபெருமான் மன்மதனை உயிர்பித்த நாளாகவும் பங்குனி உத்திரத்தை புராணம்
போற்றுகிறது ,இந்த அரிய நிகழ்வையே வடமாநிலத்தோர் ஹோலிப்பண்டிகையாக
கொண்டாடப்படுகிறது. விஷேசபலன்கள் : திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும்
விரதமிருந்து ஏதேனும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் ,சிவாலயங்களில்
வழிபட திருமணம் ,குழந்தைப்பேறு போன்ற மங்கலங்கள் உங்கள் வாழ்வில்
நடைபெறும் . முடிவுரை : வருகிற 26.3.13 முருகருக்குரிய செவ்வாய்கிழமை
நாளில் பங்குனி உத்திர திருநாள் வருகிறது. அடுத்த நாள் பெளர்ணமி திதியும்
வருகிறது. தமிழ் கடவுளாம் முருப்பெருமானையும் சிவனையும் வணங்கி உங்கள்
வீட்டில் மங்கலங்கள் உண்டாக வாழ்த்துக்கள் . மறவாமல் முருகபெருமானுக்கு
பிடித்த செவ்வரளி மாலை நெய் தீபத்துடன் சென்று முருகப்பெருமான் அருள்
பெறுங்கள் .நன்றி

Saturday, 16 March 2013
தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மட்டுமே
தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். (Total dissolved solids) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவிட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும் லயோலா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர்பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.
ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண்ணீரின் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் எவ்வாறு எல்லாம் சூறை யாடுகிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சி யில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பல தகவல்கள் பகீர் திகீர் ரகம்.
கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளி யேற வேண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.
கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.
சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண்கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வாங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவாரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது!'' என்று முடித்தார்.
ஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல்லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லையெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொடங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் ஆற்றை விஷமாக்கி வருகின்றன. பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியிடும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக்கும் 46 ஊர்களில் 27,800 கிணறுகளின் தண்ணீரை உபயோகிக்கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாலே ரசாயன நெடி தாக்குகிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலாறு மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங்கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.
தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. ஏன்? அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடைகள் இல்லையா? அந்த நாடுகளுக்குத் தோல் பொருட்களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி!'' என்கிறார் கோபத்துடன்!
குடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேகரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல்கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.
நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழகத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடுதலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இதனால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்களில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக் கற்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது!'' என்று எச்சரித்தார்.
இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன்னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தாய்ப்பான உண்மை. ''பூமியை ஓர் உயிரினம் என்பார்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவதுபோலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செய்யப்பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்!''
-டி.எல்.சஞ்சீவிகுமார்
நன்றி: ஆனந்தவிகடன், 13 பிப்ரவரி 2013

Thursday, 14 March 2013
BEWARE! Your favorite toothpaste could be laced with cancer- causing nicotine.
BEWARE! Your favorite toothpaste could be laced with cancer- causing nicotine.
A study by the Delhi Institute of Pharmaceutical Sciences and Research (DIPSAR) has found that many of the toothpaste manufacturers are adulterating toothpastes and toothpowders with high quantity of nicotine.
Out of the 24 brands of toothpastes studied in 2011, seven brands - Colgate Herbal, Himalaya, Neem paste, Neem Tulsi, RA Thermoseal, Sensoform and Stoline - were found to contain nicotine
Colgate Herbal and Neem Tulsi, also a herbal product, surprisingly had 18 and 10 mg of nicotine, which is equivalent to the quantity found in nine and five cigarettes respectively
Out of the ten brands of toothpowders examined, six - Dabur Red, Vicco, Musaka Gul, Payokil, Unadent and Alka Dantmanjan - were found to contain nicotine. Payokil was found to have the highest 16 mg of tobacco, which is equivalent of what a person consumes after smoking eight cigarettes,
Vicco was found to have used tobacco consecutively for three years in its toothpowder, while Dabur Red resumed mixing tobacco in 2011 after stopping it in 2008
Nicotine and tar are carcinogens, the manufacturers should mention them among contents along with their permissible limits on the packages to help people make an informed choice.
Nicotine action is believed to be responsible for the drug induced feeling of pleasure and addiction, said Prof Agarwal.
Toothpastes containing nicotine can have the same ill effects hitherto attributed to tobacco products such as cigarettes and paan masala . The nicotine in the toothpaste is absorbed by the tongue and saliva in the mouth. It can lead to staining of teeth too and damage the whole enamel.
Tuesday, 12 March 2013
உணவே மருந்து- நெல்லிக்காய்.
உணவே மருந்து- நெல்லிக்காய்.
உணவே மருந்து - நெல்லிக்காய்.
உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அதன் மூலம் சக்தியையும், உயிர் ஆற்றலையும் பெற்றனர். ஆரோக்கியமான உடலையும் நீண்ட ஆயுளையும் அனுபவத்தில் பெற்றவர்கள். எனவேதான்''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்று சொல்லிச் சென்றனர். ஆனால் கால மாற்றத்தால், நாகரீக வளர்ச்சியால் இயற்கை உணவை மறக்க வைத்தது நம் இயந்திர வாழ்க்கை. வறுத்த, பொரித்த உணவுகள், பீட்ஸா, பர்கர் என உணவுடன் நோயையும் விலை கொடுத்து நாம் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
நோய் வருமுன் தடுக்கவும், வந்தபின் நோயை போக்கவும் பயன்படும் பொருட்கள் இயற்கையிலேயே நம்மைச் சுற்றி நிறைய உள்ளன. நாம் மறந்துவிட்ட இயற்கை உணவை நினைவூட்டவே இந்த பதிவு.
முதலில் மிகவும் எளிய கனி. பார்த்த உடன் நாவில் நீர் ஊறவைக்கும் கனி. இளமையை தரும் கனி. நீரழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படும் கனி. ஒரு ஆப்பிள் பழத்திற்கு இணையான சத்துக்களைக் கொண்ட கனி. ஏழைகளின் ஆப்பிள் என செல்லமாக அழைக்கப்படும்
நெல்லிக்கனியின் மருத்துவ பயன்களைப் பார்க்கலாம். வெவ்வேறு மொழிகளில் நெல்லிக்கனிக்கு வழங்கப்படும் பெயர்கள்.
தமிழ் -நெல்லிக்காய்
சமஸ்கிருதம் -அமலிகா
ஹிந்தி -ஆம்லா
குஜராத்தி -ஆம்லா
மலையாளம் -நெல்லிக்கா
கன்னடம் -நெல்லி
நெல்லிக்காயின் சிறப்பு குணம்;
விட்டமின் 'சி' சத்து அதிக அளவில் உள்ளது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கும், கண்களை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் லெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. எனவே இதனை வெயிலில் காயவைத்தாலும் இதிலுள்ள விட்டமின் சத்து குறையாது. மாறாகக் கூடவே செய்யும். நம் உடலில் தினந்தோறும் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் அத்தியாவசியமான காரணிகளுடன் இணைந்து நோயைத்தரக் கூடிய ஆக்சிஜன் அயனிகள் ஃப்ரீரேடிக்கல்ஸ் எனப்படுகின்றன.இவை உடலில் தேங்கினால் மாரடைப்பைஉருவாக்கும் தன்மை உடையவை. மேலும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்ஆற்றல் படைத்தவை.முதுமைக்கும் சில நேரங்களில் புற்று நோய்க்கும் வழிவகுக்கிறது. இந்த ஃப்ரீ ரேடிகல்ஸை உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு.மருத்துவ பயன்கள்;
1.தலைமுடி கருத்து நீண்டு வளர உதவுகிறது.2.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
3.கல்லீரல் வேலை செய்ய உதவுகிறது.
4.ஞாபக சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.
5.இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
6.நகம், பல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.
7.முகச்சுருக்கத்தைக் குறைத்து இளமைத்தோற்றத்தைத் தருகிறது.
8.இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக்
குறைக்கிறது. இதன் மூலம் நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இலக்கியத் தொடர்பு;
சங்ககாலத் தமிழ் புலவர் ஔவையாருக்கு ஒரு முறை நீண்டநாள் உயிர்வாழும் சிறப்புடைய நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அதன் சிறப்பை அறிந்து.அதனைத் தான் உண்ணாமல் மன்னன் அதியமான் நெடுநாள் வாழ வேண்டி மன்ன்னுக்கு அக்கனியைக் கொடுத்த்தாகத் தமிழ் இலக்கியம் கூறுகிறது.
ஆதிசங்கரர் ஒரு நாள் பிச்சை பிச்சை கேட்டு சென்றபோது ஒரு ஏழைத்தாய் அவருக்குக் கொடுக்கத் தன்னிடம் உணவு எதுவும் இல்லையே என்று வருந்தினார். அப்போது வீட்டில் ஒரு நெல்லிக்கனி இருப்பது நினைவிற்கு வர அதனை ஆதிசங்கரருக்குக் கொடுத்தார். ஆதிசங்கரரும் அந்த ஏழைப்பெண்ணுக்கு இரங்கி மகாலஷ்மியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாட, ஏழைத்தாயின் வீட்டில் தங்கமழை பொழிந்த்தாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புகளுக்காகவே நெல்லிக்கனி அமிர்தக்கனி எனப்போற்றப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும். நமக்குத் தேவையான விட்டமின் 'சி' சத்து கிடைத்துவிடும். எனவே நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் பச்சையாகவும், கிடைக்காத காலத்தில் காயவைத்து உலர்த்திய காயையும் சாப்பிட்டு சத்துக்களைப் பெறலாம்.
''உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே''
என்ற திருமூலரின் உண்மை மொழியைப் பின்பற்றுவோம்;நீண்ட ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம். மேலும் அடுத்த வாரம் வாழைப்பூவின் மகத்துவத்தைப் பற்றி பார்க்கலாம்.
அன்புடன்
நாஞ்சில் மதி
Read more at http://tk.makkalsanthai.com/2012/11/VUNAVE-MARUNTHU.html#UR08CCAQ8mZtxzFh.99
Monday, 4 March 2013
மாதவிடாய் ஆவண திரைப்படம்
இன்றைய சமூகத்தை உலுக்கி எடுக்கும் ஒரு ஆவணப்படத்தின் கதை..
இதில் சிக்கி தவிக்கும் பெண்கள் ...
தாயாக மனைவியாக சகோதரியாக மகளாக வலம் வரும் பெண்களின் இந்த மாதாந்திர பிரச்னையை
எத்தனை ஆண்கள் மகனாக கணவனாக சகோதரனாக அப்பாவாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்
என் கேள்வியுடன் துவங்குகிறது..
கேள்விக்கு உண்மையான விடை பூஜ்யம் தான் அதற்காக வருந்த வேண்டாம் சகோதரர்களே
இது வரை எப்படியோ இனியாவது புரிந்து கொண்டு அந்த நாட்களில் பரிவுடன் நடந்து கொள்ளுங்கள் ..
"மாதவிடாய் "என்ற வார்த்தையை உபயோகிக்கவே இன்னும் இந்த சமுதாயம் கேவலமாகவே நினைக்கிறது.
"வீட்டுக்கு தூரம்" என்ற வார்த்தைகளிலேயே பெண்களை ஒடுக்குமுறை கொண்டு ஒதுக்குகிறது.
எவ்வளவு நாகரிகம் பேசினாலும் எப்படிப்பட்ட செல்வந்தர்களாக இருந்தாலும்
இன்னமும் அந்த நாட்களில் ஒதுக்கி வைக்கவும் ஒதுங்கிச் செல்லவும்தான் செய்கிறார்கள்.
பேட்டிகளில் பெண்கள் குமுறுகிறார்கள்.
இன்னமும் கிராமஙகளில் முட்டு வீடு என்ற பெயரில் இந்நாட்களில் தனிமைப்படுத்தப்படுவதினால் எத்தனை பாதிக்கப்படுகிறோம் என்று கிராமத்து பெண்களின் மனக்குமுறலில் கண்ணீர் நம் பக்கமும் வருகிறது. "முட்டு வீட்டில் "தனிமைப்படுத்தப்படும் பெண்கள் பாம்பு கடித்து இறந்த நிஜக்கதையெல்லாம் உண்டு என்கிறார்கள் ..
மாதவிடாய் என்பது அசிங்கமானதோ அருவெறுப்பானதோ புதிரோ தீட்டோ அல்ல.
தாய்ப்பாலை போன்று பெண்ணின் உடலில் ரத்தத்தில் ஊறும் இயற்கையான சங்கதி.
இந்த அறிவியல் ரீதியான புரிதல் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கே இல்லை என்பது தான் நிஜம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
முகச்சவரம் செய்யும் ஆண்களுக்கு ரேசர் போலத்தான் பெண்களுக்கு இந்த நாப்கின். ஆனால் இந்த நாப்கின் வாங்கி வரவோ தரவோ ஏன் இவ்வளவு கூச்சம் . அதை ஒரு பேப்பரில் சுருட்டி கருப்பு கலர் பாலிதீன் பையில் ரகசியமாக வைத்து கொடுக்கும் கெட்ட பழக்கத்தை எப்போது விடப்போகிறார்கள் .
டி.வி.க்களில் பிரமாதமாக நாப்கின் பற்றி விளம்பரம் செய்யப்பட்டாலும் உண்மையில் எண்பது சதவீத இந்திய பெண்கள் துணிதான் உபயோகிக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்களுக்கு பயந்து அந்த துணியை சரியாக உலர்த்தாமல் சுத்தம் செய்யாமல் அணிவதால் எத்தனை பேர் கர்ப்பப்பை வாய் புற்று நோய் வரைக்கும் உள்ளாகிறார்கள் தெரியுமா ..
என்ற கேள்வி எழும்போது கூடவே அதிர்ச்சி ஏற்படுவரை தடுக்க முடிவதில்லை .
நாப்கின் உபயோகிக்கும் பெண்களுக்கு அவர்களுக்கான கழிப்பறைகளில் அதற்கான அடிப்படை வசதி ஏற்படுத்தி தந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எங்குமே இல்லை வெறும் ஆவணப்படம் எடுப்பதுடன் நின்று விடாமல் ஒரு படி மேலே போய் அரசு அலுவலகங்களில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைகளில் மாதவிடாய் தேவைகள் என்ன செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட போது அப்படி ஒரு வசதியும் செய்து தரப்படுவதில்லை என்பதே பதிலாக வந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் காட்டும் போது பார்க்கும் நமக்கு வெட்கமாக இருக்கிறது.
அவ்வளவு ஏன் சட்டம் இயற்றும் சட்ட மன்ற கட்டடத்திலேயே இந்த அடிப்படை வசதி இல்லை என்கிறார்
""சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ""..
இவரைப்போல 55 பெண்கள் தங்களது கருத்துக்களை வலுவாக பதிந்துள்ளனர்.
••அம்மா உங்க புடவையில கறை••
என்றதுமே ஏதோ குற்றம் செய்துவிட்டது போல பதறிப்போவோம். இனி அந்த பதற்றமே கூடாது என்றும் கூறுகிறார்.
வீடுகளில் அலுவலகங்களில் இருக்கும் பெண்களுக்கு இது மாதிரிப் பிரச்னை என்றால் களப்பணியாற்றும்
""பெண் போலிசாரின் நிலைமை இன்னும் மோசம்"",......
சாதிக்கலவரம் நடக்கும் இடத்திற்கு செல்லும் பெண் போலிசார் அவசரம் கருதி ஏதேனும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து நிட்டால் போலீஸ் அந்த சாதிக்கு ஆதரவாயிடுச்சுன்னு சொல்லி விடுவர் என்கிறார்
"""முன்னாள் போலீஸ் அதிகாரி திலகவதி""".
மகளுக்கு விதம் விதமாக நகைகள் வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பதை விட அவளின் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண விளையுங்கள். பொன் நகை ஏற்படுத்தாத புன்னகை அவள் முகத்தில் தவழும்.
மகப்பேறு குழந்தை வளர்ப்பு போல மாத விடாயும் பொம்பளைங்க சமாசாரம் என ஒதுக்கி வைக்கும் ஆண்களே இனியும் அப்படி இருக்காதிர்கள்.. அது உங்கள் ஆண்மைக்கே அழகல்ல
மேற்சொன்ன அனைத்திலும் உங்களுக்கு ஆழமான பொறுப்பு உண்டு என்று
அழுத்தந்திருத்தமாய் சொல்லி முடிகிறது ஆவணப்படம்....
DIRECTOR : GEETHA ELANGOVAN
Sunday, 3 March 2013
பதினொராந் திருமுறை
உ
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
ஸிம்ஹக்ந மூர்த்தம்
(சிவபெருமான் நரசிங்கத்தோல் அணிந்தது)
பொங்குளை யழல்வாய்ப் புகைவிழி யொருதனிச்
சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
-பதினொராந் திருமுறை
--------------------------------------------------------------------------------
சிவமயம்
காசிபமுனிவர் திதி, அதிதி, தனு, அரிட்டை, சுரசை, கடை, சுரபி, விநதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்னும் பதின்மூவரையும் விவாகஞ் செய்தார். அவருள் திதி என்பாள் இரணியன், இரணியாக்கன் என்னும் இருவர் ஆண்மக்களையும், சிம்மிகை என்னும் பெண்ணொருத்தியையும் பெற்றாள். அவருள் இரணியன் என்பான் பிரமாவை நோக்கித் தவமியற்றினான். பிரமதேவர் அவனுக்கு அருள் செய்யும்படி தோன்றி, "உனக்கு யாது வரம் வேண்டும்?" என்று வினாவியருளினார். இரணியன் "பங்கயாசன! பஞ்சபூதங்களாலும், ஆயுதங்களாலும், பக்ஷ¢களாலும், மிருகங்களாலும், தேவராலும்; மனிதராலும் யான் இறவாதிருக்க வேண்டும்; இரவிலும் பகலிலும் இறவாதிருக்கவும், இறப்பினும் எனது யாக்கையின் குருதி ஓர் துளி பூமியில் விழுந்தாலும் அது என் வடிவெடுத்து என் பகைவரை வேரொடு போக்கும்படியும் அருள் புரிய வேண்டும்; ஐய! இவற்றைத் தந்தருளுக" என்று விண்ணப்பித்தான். பிரமதேவர் அவன் கேட்டவற்றைக் கொடுத்து, ஆயுதவகைகளையும் அளித்து மறைந்தருளினார். அளப்பற்ற வலி பெற்ற அசுரேசன் அண்டவாசிகள் அனைவரும் தன்னடி பணியும்படி கட்டளை செய்தான். இந்திரன் முதலாந் தேவர்களும், தேவ மகளிர்களும் அவனது குற்றேவலைச் செய்து ஒழுகுவராயினர். இவனது கொடுங்கோலிடைப்பட்ட சமஸ்தரும் "இரணியாய நம" என்றே இயம்புவார்கள். மறந்தும் மற்றொன்றும் கூறார்கள்.
இரணியன் வைதிக தருமங்களைத் துறந்து, பெரும் பாதகங்கள் முற்றும்படி கொடுங்கோல் செலுத்திவருங் காலத்தில், அவனுக்கு ஓர் புத்திரன் உதித்தான். அவன் பெயர் பிரகலாதனன். அவனுக்கு ஐந்தாண்டாயிற்று. சுக்கிராசாரியார் குமாரர் இருவரிடத்தில் இரணியன் தனது புத்திரனை வில்வித்தை கற்கும்படி அனுப்பினான். ஆசாரிய புத்திரர்கள் அவனுக்கு ஆரம்பத்தில் 'இரணியாய நம' என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவன் அதனைச் சொல்லாது மறுத்து, 'நமோ நாராயணாய' என்று கூறினான். அவர் இருவரும் எளியவனாகிய இரணியனிடத்தில் இதனை அறிவித்தனர். இரணியன் தனது புத்திரனை அழைத்து, "நீ யாது கூறினை?" என்று கேட்டான். பிரகலாதனன் "நமோ நாராயணாய" என்றான். இரணியாசுரன் வடவாமுகாக்கினி போலக் கோபித்து, ஏவலாளர்களைப் பார்த்து, "வாளை வீசி இவனைக் கொன்றிடுங்கள்" என்று கட்டளை யிட்டான். அவனை அவர்கள் வாளால் வெட்டினர். ஆயுதங்கள் முரிந்தன. அதன்பின் விஷமூட்டி அவனைக் கொல்லும்படி பணித்தான். அவ்விஷம் அவனுக்கு அமுதாயது. அதன்பின் நாகங்களைக் கடிக்கும்படி விடுத்தான். பாம்பின் பற்கள் தெறித்தன. பிரகலாதனன் ஒன்றாலும் இறந்திலன் என்பதை இரணியன் அறிந்து, "இவனை நெடிய மலையின் உச்சியிற் கொண்டு சென்று, உறுப்புக்களைக் கட்டிப் பூமியில் தள்ளுங்கள்" என்று கட்டளையிட்டான். அவர்கள் அப்படி உருட்டினார்கள். பிரகலாதனன் இதனாலும் இறந்திலன். அவுணன் செய்வதொன்றும் உணர்ந்திலனாய்த் தன் புத்திரனைச் சபை முன்னர்த் தருவித்து தீப்பொறிகால நோக்கி, "என்னையன்றி உலகத்தைப் படைத்துக் காத்தற்கு உளதெனக் கூறிய கடவுளை என்னெதிரிற் காட்டுதி" என்று வெகுண்டு கூறினான். அப்பொழுது வேத முணர்ந்த அப்புதல்வன் "அறிவை யூட்டி அனுக்கிரகிக்கும் முதற் பொருளாவது கடவுளே, தேவர் நாயகரும் திருமகள்நாயகரும் அடியார் மனதிற் குடிகொண்டிருக்கும் காவல் நாயகருமாகிய திருமாலே அக்கடவுள்" என்று கூறினான். இப்படி அவன் கூறியதனை இரணியன் கேட்டலும், "இச்சிறு தூணில் அவனைக் காட்டக்கடவாய்; அங்ஙனம் காட்டாதொழியின் உன்னைத் தின்பேன்" என்று தீப்பொறி சிந்தக் கோபித்தான்.
அப்பொழுது, அவன் சுட்டிய தூணிலிருந்து திருமால் நரசிங்கமாய்த் தோன்றியருளினார். நரசிங்கம் மாலைப் பொழுதில் இரணியனை மடியிலே கிடத்தி, குடலைப் பிடுங்கி இரத்தத்தைப் பருகியது. அது குருதிநீர் குடித்தமையால் கருவங்கொண்டு, தன் நிலைமை மறந்து உலகத்துள்ள ஜீவராசிகளை வருத்தியது. பிரமனாதியோர் அந்த நரசிங்கத்துக்குப் பயந்து, திருக்கைலாச கிரியை அடைந்து, பரமேசுரனுடைய திருச்சன்னிதானத்தில் நின்று, "ஐயனே! மறைக்குமெட்டாத மெய்யனே! மழுப்படை பரித்த கையனே! தேவரீரைச் சரணம்டைந்தனம்; புகலிடம் பிறிதில்லை; விட்டுணுவாகும் நரசிங்கம் செய்யும் குரோதத் தொழிலைத் தாங்கமாட்டோம்" என்று இரந்தார்கள்.
சிவபெருமான் வீரபத்திரக் கடவுளை அழைத்து, "நரசிங்கத்தின் செருக்கை அழித்தி" யென்று கட்டளையிட்டருளினார்.
வீரபத்திர உருத்திரமூர்த்தி சரபப்பக்ஷ¢யின் பேருருவெடுத்து, அந்த நரசிங்கத்தின் பிடரிற் பாய்ந்து, சகல அவயவங்களையும் குத்தினார். நரசிங்கம் கர்வம் அகன்று உயிரிழந்தது. வீரபத்திரக் கடவுள் நரசிங்கத்தின் தோலை உரித்தெடுத்துச் சிவபெருமானது திருச்சன்னதியில் வைத்து வணங்கினார். பிரமா முதலியோர் சிவபெருமானைப் பார்த்து,
"எங்கள் நாயக! இதனை ஆடையாகக் கொண்டருள்க" என்று பிரார்த்தித்தனர். சிவபெருமான் அவ்விதமே சாத்தியருளினார்.
"பத்திச் சிங்கவணை மீது படரின்றிருந்து பார்த்திவனை
எத்திச் சிங்கலறக் கொன்ற இறுமாப்பதனால் இருநிலத்திற்
றத்திச் சிங்கலுறத் தேய்த்தறன்னைக் கண்டு சரபமதாய்க்
கொத்திச் சிங்கந்தனையழித்த கோவே நினது சரண் போற்றி"
என்று சிவ பராக்கிரமத்திலும்,
"எரித்தமயிர் வாளர்க்கண் வெற்பெடுக்கத் தோளொடு தாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினாள்
உரித்த அரித்தோல் உடையான் உறைவிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவர்தாம் தக்காரே"
என்று திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் சரபேஸ்வரர் பராக்கிரமம் காட்டப்படுகிறது.
பரமசிவனது பாதகமலங்களுக்கு நரசிங்கமூர்த்தி அருச்சனை செய்தனர். விட்டுணு அந்த அவதாரத்திற் செய்த பாவங்கள் அணைத்தும் தீர்ந்தன.
"துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை யாகங் கீண்ட
அங்கனகத் திருமாலு மயனுந் தேடு
மாரழலை யனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேன் மன்னி நின்ற
செங்கனகத் திரடோளெஞ் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேனானே"
என்று அப்பர் சுவாமிகளும்.
"எவர் கோரமான சரபவேஷந் தாங்கி உலகத்தை வருத்திய நரசிங்கத்தை ஹிம்சித்தனரோ, பாதங்களால் அரியை அரிக்கின்றவரோ, புருஷரூப விஷ்ணுவை வதம் செய்யாமல் தேவரீரது பராக்கிரமத்தை மாத்திரம் காட்டியருளல் வேண்டுமென்று சர்வ தேவர்களாலும் மகாநிசியில் பின்றொடர்ந்து பிரார்த்திக்கப்பட்டனரோ, கிருபையினால் நரசிங்கத்தின் தோலை நகங்களாற் கிழித்துரித்தெடுத்து, வஸ்திரமாக அணிந்து கொண்டாரோ, மகாபலமுள்ள வீரபத்திரமூர்த்தியாகிய அந்த உருத்திரர் ஒருவரே தியானிக்கற்பாலர்" என்று சரபோபநிடதம் இவ்வற்புதச் செயலைப் புகழுகின்றது.
சிவஞானசித்தியார் பரபக்ஷம் பாஞ்சராத்திரி மறுதலையில் ஸ்ரீ அருணந்திசிவாசாரியரும்.
"இங்கடாவுளனோமாலென்றிரணியன் றூணையெற்ற
ஷங்கடாமோதரன்றானுருநரசிங்கமாகி
யெங்கடாபோவதென்னாவுடல் பிளந்திறையானென்ன
வங்கடாசிம்புளாகியெடுத்தடர்த்தானரன்றான்"
என நரசிங்கத்தைச் சங்கரித்தமை கூறியருளினார்.
"நரஹரி விஜயாத்" (மானுடமடங்கலை வலிதபக்கோறலின்)
"பசுபதிஸ் ஸர்வதேவ ப்ரகிஷ்ட:" என்றதனால் பரமசிவனே அமரர்கள் அனைவர்கட்கும் உயர்ந்தோர் என்று அரதத்தாசாரியர் சிவபரத்துவம் நிலையிட்டருளினர்.
நரசிங்கத்தைக் கொல்லும்படி வந்த சரபத்தோடு, அந்த நரசிங்கம் கண்டபேரண்டம் என்ற பக்ஷ¢யின் உருவெடுத்து யுத்தம் செய்து ஜயித்தது என்று புற மதஸ்தர் ஒரு கதை கூறுவர். நரசிங்கத்தைச் சரபம் கொன்றதென்னும் வாக்கியம் சரபோபநிடத்தில் உளது. விட்டுணு சரபத்தை எதிர்த்தமைக்கு வாக்கியம் நரசிங்க பூருவதாபினி, உத்தரதாபினிகளிற் காணப்படுவது பொருத்தம். அங்ஙனம் காணப் பெறாமையால் அக்கதை புதுவதாய்ப் படைக்கப்பட்ட கற்பனையேயாம்.
ஸிம்ஹக்ந மூர்த்தம் சிவபெருமானுடைய அஷ்டாஷ்ட (அறுபத்துநான்கு) லீலாமூர்த்தங்களுள் ஒன்றாகும். சரபமூர்த்தியானவர் சூரியசோமாக்கினி நேத்திர முடையராயும், அக்கினிச்சிகையுடையராயும், இருபக்கமும் சிறகுகளையுடையராயும், வெளிப்பட்ட பற்களையுடையராயும், எட்டுக் கால்களும் நான்கு கைகளுமுடையராயும், நரசிங்கத்தின் மார்பைப் பிளப்பவராயும் இருப்பர்.
"நன்னாலிரண்டு திருவடியும், நனி நீள்வாலும், முகமிரண்டும்
கொன்னார் சிறகும், உருத்திரமும், கொடும் பேரார்ப்பும் எதிர்தோற்றிச்
செந்நீர் பருகிச் செருக்கு நரமடங்கல் ஆவி செகுத்துரிக் கொண்(டு)
ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான் சரபத் திருவுருவம்"
என்று காஞ்சிப் புராணத்தில் காட்டப்படுகிறது.
இச்சரித்திரத்தினாலே கடவுளும் புண்ணிய பாபமும் இல்லையென்று நாத்திகம் பேசுவோர் தண்டிக்கப்படுவர் என்பதும், மகாபராக்கிரமசாலியாகிய இரணியனது கொடுரங்களைக் கடக்கும் சத்தி பிரகலாதனனுக்கு வாய்த்தது, சிவனுக்குத் தொழும்புசெய்யும் விட்டுணுவின் மீது வைத்த பக்தி மிகுதியினாலேயாம் என்பதும், விட்டுணுவின் தியேயப் பொருளா விளங்குபவர் பரமசிவனே என்பதும், அகங்காரத்துக்கும் பிராயச்சித்தமாய் முடிவது சிவார்ச்சனையே ஆம் என்பதும் பிறவும் பெறப்படுகின்றன.

நரசிம்ஹரரை வதைக்கும் ஸ்ரீ சரபேஸ்வரர்
courtesy:ஸ்கந்தப்-பிள்ளைவாள்/
Saturday, 2 March 2013
மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்.
மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது
போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடு மற்றும் பன்றிக்கும் பொருந்துகிறது.
இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.
படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு:
மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர்.
அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் (இந்திய ரூபாய்) வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.
மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர்.
அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.
பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் "சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
எலும்பு பவுடர் உரம்: வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.
மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.
....via நல்ல நண்பன்

Friday, 1 March 2013
தியானிப்பது யார்?
த்யானத்தின் ஒரு அடிப்படையான விஷயம்.
தினசரி காலையில் தியானிப்பது யார்? த்யானிக்க அமரப்போவது வரை என்னவோ இந்த 'கிரிதரன்' தான். த்யானம் கூடிவருகையில் கவனித்தால் தான் தெரிகிறது த்யானிப்பது சுந்தரமல்ல! இந்த கிரிதரனுக்குள் இருக்கும் எழுபது லட்சம் கோடி ஜீன்கள் என்பது. இந்த சுந்தரம் என்பது அந்த எழுபது லட்சம் கோடி ஜீன்களின் தொகுப்பான மன அமைப்பு. அந்த முதல்உயிரி அமீபாவிலிருந்து பயணித்து இன்றுவரை தொடர்ந்து சுய தேடலில் இருப்பது இந்த ஜீன்கள் தான்.
பல்லாயிரமான பிறவிகளும் இந்த ஜீன்களுக்குதான் இந்த கிரிதரனுக்கல்ல.
இந்த பிறவியில் இந்த ஜீன்களின் தொகுப்பான இந்த மனதின் பெயரே சுந்தரம். நீங்கள் பல பிறவிகள் எடுத்து விட்டீர்கள் என்றால் அது உங்களுள் இருக்கும் ஜீன்களுக்கே பொருந்தும்.
த்யானத்திலும் த்யானிப்பது ஜீன்களாக இருந்தால்தான் அது த்யானம். அது கிரிதரனாக இருந்தால் த்யானமே கூடி வராது. ஏனெனில் கிரிதரன் ஒரு மன அமைப்பு. மனதை கடந்தால்தான் த்யானம் கூடும். மன அமைப்பை கடந்து பார்த்ததால் அங்கிருப்பது இந்த ஜீன்களே!.
இந்த ஜீன்களின் சுய தேடலே ' அசைவற்ற, சாட்சித்தன்மையான அந்த ஒளிப்பொருந்திய சுத்த அறிவேயாகும்'. அது எங்கும் நீக்கமற நிறைந்து பூரணமாக இருப்பது.
அதுவே பூர்ணம்.

உதவி:வாழ்க்கை விளக்கம்
Subscribe to:
Comments (Atom)