மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.
திருவடி தீட்சை
தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.
தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.
ஒரு ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின் தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்:
“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”
திருமந்திர பாடல் – 2816
விளக்கினை பிளந்து விளக்கினை ஏற்றி – இங்கு திருமூலர் நமது உடலில் விளக்கான கண்ணை பிளந்து ஏற்ற பட வேண்டும் என்கிறார். ஏன் பிளக்க வேண்டும்? எதனால் பிளக்க வேண்டும்?
நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.
தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.
தீட்சையின் போது முதலில் நம் புற கண்ணை திறந்து குருவின் கண்ணை பார்க்க வேண்டும். தீட்சை பெற்ற பின் கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண் திறந்து கண்மணி உணர்வை பற்றி தவம் செய்தால் தான் கண் ஒளி பெருகும்.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம் ஜீவ ஒளியும் , புற ஒளியும் ஒன்றல்ல. நம் ஜீவா ஒளியை தகுதி பெற்ற சற்குருவின் ஜீவ ஒளியை கொண்டு தான் தூண்ட முடியும். வேறு எந்த புற ஒளியை கொண்டோ வேறு எதனாலோ தூண்ட முடியாது.
இதுவே தீட்சை. தீட்சையின் மூலம் வள்ளல் பெருமான் நம்முள் வந்து , நம் உடனிருந்து வழி நடத்தி , தவம் செய்ய துணை புரிந்து நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.
நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.
இறைவனை அடைந்த எல்லா சித்தர்களும் , ஞானிகளும் இவ்வாறே தீட்சை பெற்றனர். தங்கள் கண் ஒளியை பற்றியே தவம் செய்து தன்னை உணர்ந்து இறைவனை உணர்ந்தனர்.
நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.
“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.
தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.
மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.
தீட்சை பெற வேண்டிய தகுதிகள்:
தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.
இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் குருவை வணங்கி தீட்சை பெறலாம்.

No comments:
Post a Comment