Thursday, 28 February 2013

சில மறைந்திருக்கும் உண்மை கோட்பாடுகள்....

சில மறைந்திருக்கும் உண்மை கோட்பாடுகள்....
இந்து மதமும் பகவத் கீதையின் கூற்று: 

நீயும் உன் குடும்பத்தாரும் இறைவனின் வழிபாட்டுக்காக வரும் நல்ல நாட்களில் விரதம் இரு! அப்போது உன் வீட்டில் அன்றைய தினம் சமையலுக்கு (சைவ உணவு) தேவைப்படும் உணவுப்பொருட்களை நீயும் உன் சுற்றத்தாரும் ஒரு கோவிலில் அந்த உணவுப்பொருட்களை சமைத்து அன்று மாலை ஏழை எளிய மக்களுடம் அந்த உணவை ஒரு நேரம் மட்டும் சேர்ந்து சாப்பிடு இதுதான் விரதம்!




இசுலாம் சொல்கிறது:

நீ இசுலாத்தின் கடமைகளாக வரும் நல்ல நாட்களில் பகல் நேரம் சாப்பிடாமல் இரவு வேளை மட்டும் சாப்பாடு சமைத்து வறியவர்களையும், ஏழைகளையும் சேர்ந்து உன் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு நேரம் சாப்பிடு!

சிக் மதம்:

நீ பணக்காரனாக இருந்தால் ஏழைகளை அழைத்து ஒன்றாக சாப்பிடு! நீ பணக்காரனாக இருந்து கொண்டு நீ மட்டும் சாப்பிட்டு விட்டு ஏழைகளை பட்டினி போடாதே!

கிறிஸ்தவம்:

பணம் படைத்தவர்களிடம் பணம் பெற்று கிறிஸ்துவின் பெயரால் ஏழைகளுக்கு உணவளி!

பௌத்தம்:

புத்தனின் பெயர் சொல்லி வாறவர்களை அன்போடு ஆணை அவர்களுக்கு பசியோ தாகமோ எடுத்தால் இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு சற்றேனும் உணவும் தாகத்துக்கு தண்ணீரும் உறங்குவதற்கு இடமும் குடு!

இதில் எல்லா வர்க்கத்திலும் இன்றைய உலகம் எப்படி மாறி நடக்கிறது என்று சற்று எண்ணி பாருங்கள்.
- சிவம் கண்டர்

விளக்கேற்றும் பலன்கள்


விளக்கேற்றும் பலன்கள்
----------------------------------
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்

யாருக்கு என்ன எண்ணெய் (விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)
-----------------------------------------------------------------------------------------------
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
எண்ணையும் அதன் பயன்களும்

விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

தீபம் ஏற்றும் திசைகள்
-------------------------------
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
----------------------------------------------------------------------
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது

திரிகளும், பயன்களும்
-------------------------------
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

வாளம் பெருக்கும் அகல்:
-----------------------------------
கார்த்திகை மதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.

இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம்.

அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு.

வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு

விளக்கேற்றும் பலன்கள்
----------------------------------
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்

யாருக்கு என்ன எண்ணெய் (விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)
-----------------------------------------------------------------------------------------------
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
எண்ணையும் அதன் பயன்களும் 

விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும் 
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு 
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

தீபம் ஏற்றும் திசைகள் 
-------------------------------
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
----------------------------------------------------------------------
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது

திரிகளும், பயன்களும்
-------------------------------
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

வாளம் பெருக்கும் அகல்:
-----------------------------------
கார்த்திகை மதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.

இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம்.
 
அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு.

வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு
Add captionDEEPAM..MAHIMAI




இந்தியாவில் ....



இந்தியாவில் ....

கல்வி ::
வியாபாரம் ஆகிப்போனது ...L KG தொடங்குது

அரசியல் ::
பணம் அருவி போல் கொட்டும் இடம்

கோவில்கள் ::
கடவுளை சிறையில் வைத்து விட்டு
பணம் பண்ணும் இடம்

மருத்துவம் ::
ஐயோ ...சொல்லவே வேண்டாம்
சொத்து இருந்தால் நோய் வரலாம்
இல்லாதவன் ..நேரடியாக கிழே
சொல்லும் இடத்துக்கு சென்று
படுத்து கொள்ளலாம் ...

அது ::

ஆண்டியும் இங்கே
அரசனும் இங்கே
அறிஞன் இங்கே
அசடனும் இங்கே

சேவை செய்யும் தியாகி
சிருங்கார போகி
ஈசன் பொற் பாதம் தன்னை நாடிடும் யோகி

எல்லோரும் ஒன்றாய் இங்கே
உறங்குவார்கள்

ஆவி போன பின் சேருவார் இங்கே

இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே ...

சமரசம் உலாவும் இடம் !!!!!..........

courtesy: pon gnana moorthy...facebook

Monday, 25 February 2013

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு


சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
(குப்லாய் கான்)
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

திருவடி தீட்சை


மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.


திருவடி தீட்சை

தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.

தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

ஒரு ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின் தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும்.

திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்:
“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”
திருமந்திர பாடல் – 2816

விளக்கினை பிளந்து விளக்கினை ஏற்றி – இங்கு திருமூலர் நமது உடலில் விளக்கான கண்ணை பிளந்து ஏற்ற பட வேண்டும் என்கிறார். ஏன் பிளக்க வேண்டும்? எதனால் பிளக்க வேண்டும்?

நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.

தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.

தீட்சையின் போது முதலில் நம் புற கண்ணை திறந்து குருவின் கண்ணை பார்க்க வேண்டும். தீட்சை பெற்ற பின் கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண் திறந்து கண்மணி உணர்வை பற்றி தவம் செய்தால் தான் கண் ஒளி பெருகும்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம் ஜீவ ஒளியும் , புற ஒளியும் ஒன்றல்ல. நம் ஜீவா ஒளியை தகுதி பெற்ற சற்குருவின் ஜீவ ஒளியை கொண்டு தான் தூண்ட முடியும். வேறு எந்த புற ஒளியை கொண்டோ வேறு எதனாலோ தூண்ட முடியாது.

இதுவே தீட்சை. தீட்சையின் மூலம் வள்ளல் பெருமான் நம்முள் வந்து , நம் உடனிருந்து வழி நடத்தி , தவம் செய்ய துணை புரிந்து நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.

இறைவனை அடைந்த எல்லா சித்தர்களும் , ஞானிகளும் இவ்வாறே தீட்சை பெற்றனர். தங்கள் கண் ஒளியை பற்றியே தவம் செய்து தன்னை உணர்ந்து இறைவனை உணர்ந்தனர்.

நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.

தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.

மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

தீட்சை பெற வேண்டிய தகுதிகள்:

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.
இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் குருவை வணங்கி தீட்சை பெறலாம்.

Saturday, 23 February 2013

நட்சத்திர உழைப்பாளி திரு.தசரத் மான்ஜி..!





தனி ஒருவராய் மலை பாதை அமைத்த நட்சத்திர உழைப்பாளி திரு.தசரத் மான்ஜி..! இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.
                         
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட, மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். 

இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. 

கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். 

மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் மலையை உடைத்து பாதையை 1981 ஆண்டு முடித்தார். 

60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். 

வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.  

Friday, 22 February 2013

உங்கள் வகையில் ஆலயதீப கைங்கர்யம்


Support Us

சிவாய நம:
யார் வேண்டுமானாலும் இந்த தெய்வீக திருப்பணிக்கு உதவ முடியும். ஆங்காங்கே இருப்பவர்கள் எண்ணெய் வாங்கியும் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் பணமாக செலுத்தவும் முடியும். பணம் செலுத்த வேண்டிய account விவரங்கள் கீழ்க்கண்டவாறு:
Account Name:  GIRIDHARAN M
Bank Name:  STATEBANK OF INDIA
Branch :  SAIBABACOLONY BRANCH(4792)
Savings Bank Account No:  11200621292
Inform us Via email the date and amount of the deposit and your name and address immediately for us to send the acknowledgement.
or Contact  GIRIDHARAN M (MOBILE:7200086562)

Wednesday, 20 February 2013

தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு..!

தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு..!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.அதாவது,
மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.


கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்கநல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு சூப் 2
தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை:

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி,
சீரகம்,கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.


கொள்ளு ரசம்
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்
கொள்ளு - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சிறிய வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு குழம்பு
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

பொடியாக்கி வைத்துக்கொள்ள:

துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.

(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)

Saturday, 16 February 2013

இந்தியாவில் இரண்டு மோட்டார் வீடுகளை அறிமுகம் செய்யதுள்ளது.

இந்தியாவில் சொகுசு மோட்டார் இல்லங்கள் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னால் பிசிபி டெர்ரா மோட்டார் வாகனங்கள் விற்பனைக்கு வந்த்து.
ஜெசிபிஎல் இந்தியாவின் முன்னணி பேருந்து கட்டுமான நிறுவனமாகும். JCBL நிறுவனம் இத்தாலியின் PLA-SLA நிறுவனதுடன் இனைந்து இந்தியாவில் இரண்டு  மோட்டார் வீடுகளை அறிமுகம் செய்யதுள்ளது.

JCBL PLA Motor Home


இந்த இரண்டு மாடல்களிலும் ABS,ESP,க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் ஏணி வசதிகள் உள்ளன.
என்ஜின் ஃபியட் டக்கேட் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 180PS மற்றும் டார்க் 400NM  ஆகும்.
JCBL PLA Motor house

JCBL PLA HS 75


 JCBL PLA HS 75 என்பதே இந்த வாகனத்தின் பெயராகும். இந்த மாடலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை 4 மற்றும் 5 இருக்கைகள் கொண்ட வாகனங்களாகும்.
இவற்றில் உள்ள வசதிகள் 5 பெட்ரூம், ஒரு வாஷ்ரூம் மற்றும் தனிதனியான சவர், உணவருந்தும் மேசை, மும்முனை கேஸ் பர்னர் ஸ்டவ்,பாத்திரங்கள் கழுவுமிடம்,குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, மேலும் போதுமான இடவசதி.

JCBL PLA HS 75 விலை ரூ 75 இலட்சம்.(on-road New Delhi)

JCBL PLA Motor Home bedroom


JCBL PLA M742

JCBL PLA M742 மோட்டார் வீட்டில்  JCBL PLA HS 75 மோட்டார் இல்லத்தில் உள்ள வசதிகளுடன் இதில் 6 பெட்ரூம், பாதுகாப்பு வசதிகள், கேப்பினை சூடேற்றும் வசதியும் உள்ளது.

JCBL PLA M742  விலை ரூ 80 இலட்சம்(on-road New Delhi)

முதல் வருடத்தில் 100 வாகனங்களுக்கு அதிகமாக விற்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JCBL PLA Motor Home

JCBL PLA Motor Home

Friday, 15 February 2013

சிவராஜயோகி ஸ்ரீமாதவானந்தா

ஜீவ சமாதி - ஸ்ரீமாதவானந்தா ஜீவ ஐக்கிய வரலாறு ஞானபிதா சிவானந்த பரமஹம்ஸர் ...... சித்த சமாஜ ஸ்தாபகர் அவர்கள் தமது ஊர்த்துவதியின் மூலம் பெறப்பட்ட சித்த வித்தையினைஉலகில் உள்ள மக்கள் அனைவரும் சாந்தியும், சமாதனமும் அடையும் பொருட்டு, எல்லோரும்வாரி வழங்கினார்கள்,அப்படிப்பட்ட நல்வித்தில் முளைத்து, ஞானத்தை அடைந்துவரும் ஞானபிதாவிடம்ஆனந்தா பட்டம் பெற்ற பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான சித்த சிவராஜயோகி ஸ்ரீமாதவானந்தா கேரளா மாநிலம் ஆலப்பிழை கொடுங்கலூரில் பிறந்தார், என்று தெரியவருகிறது, இமயமலைச் சாரல்களில் பலகாலம் தவம் புரிந்து, தமது இறுதிக்காலத்தில் தாம் சமாதியாக வேண்டுமென்ற உள்ளுணர்வு ஏற்பட அதற்கு ஏற்ற இடம் பாம்புகோவில் சந்தையைஅடுத்த வெள்ள மடத்து விநாயகர் கோவில் அருகில் தான் என்பதை உணர்ந்தார்.

 சித்த சிவராஜயோகிமாதவானந்தா பாம்புகோவில்சந்தையை அடுத்த வெள்ளை மடத்து விநாயகர் கோவிலுக்கு 6-2-1964ம் தேதி வந்துசேர்ந்தார். விநாயகர் கோவில் அர்ச்சகரிடம் தாம் இன்னும் நான்கு நாட்களில் சமாதி அடையப்போவதாகக் கூறி, அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய சொன்னபோது, அதை நம்பமறுத்த அர்ச்சகரின் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துக்கூறி அவரை நம்ப வைத்தார், பின், சுவாமிகள் குறிப்பிட்ட அதே இடத்தில் அதே நேரத்தில் 10-2-1964ல் பத்மாசனத்தில் அமர்ந்து மகாசமாதி அடைந்தார்கள், அருகிலுள்ள கிராம மக்கள் அனைவரும், சுவாமி சொன்னபடி சமாதி வைத்தார்கள். பிரம்ம ஸ்ரீ மாதவானந்தா அவர்கள் கூறியபடியே கருடன் பறந்து வந்து, சுற்றிக் கொண்டிருந்தது, அன்ன ஆகாரமமின்றி இருந்து மூன்றாம் நாள் சமாதி அடை, அது சுவாமிகளின் அருகிலேயே சமாதி வைக்கப்பட்டது,

 சில நாட்களுக்கு பிறகு சுவாமி சங்காரானந்தா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து சமாதியை மீண்டும் தோண்டிய போது, அவரின் உடல் சிதையாமல் பொன்னிறமாக ஒளிர்ந்தது. பின் சமாதியை சுற்றி கல்லினால் கட்டிடம் கட்டி 1969 அக்டோபர் மாதம் 13ம் தேதி உயர்திரு ஸ்ரீ கிருஷ்ணரெட்டி ஹைகோர்ட் ஜட்ஜ் அவர்கள் தலைமையில் ஐந்தருவி தவத்திரு சங்கரானந்தா சுவாமி அவர்களால் திருப்பணி செய்து , அவ் ஜீவ சமாதியில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று கூட்டு ஜெபமும் அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஜீவ சமாதி பிரம்ம வழிபாட்டு முறைகளையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இங்கு தியானம் என்பதற்கு ஜபம் என்றும் மூச்சுபயிற்சிதான் பிதானம் என்றும் ஜபம் செய்பவர்கள் மேலாடை அணியலாகாது என்றும் சிவ மந்திரங்கள் ஒதுவது தவிர்க்கப்படுகிறது, மேலும் சைவ ஜீவ சமாதிகளில் லிங்கம் பிரதிஷ்டைக்கு பதில் பிரம்ம குமாரிகள் சபை போன்று சமாதியில் தாமரை மலர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது, ஓம் என்ற ஒலிக்கோ அல்லது சிவ நாமங்களுக்கோ இடம் இல்லை, மேலும் முற்றிலும் இது ஒரு பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த ஜீவ சமாதியாகும்

Monday, 11 February 2013

தாய் மரம்

கோவையை சார்ந்த தாய் மரம் என்ற குழுவினர் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பதிற்காக ஒரு புதிய அமைப்பு ஒன்றை நிறுவி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.அதன் செயல் வடிவம்
பின்வருமாறு

உங்கள் நிலத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தாத உபரி இடம் இருந்தால் மரம் நடுவதற்கு அனுமதியுங்கள்.

மரம் நடுவதற்கு ஏற்ற இடம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது. ப்ரணவ பீடம் அறக்கட்டளை நட்சத்திர மரங்களை இலவசமாகவே வழங்க இருக்கிறது. உங்களுக்கு மரம் நடும் ஆர்வம் இருந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். மற்றவை இயற்கை தானாகவே பார்த்துக்கொள்ளும்.

சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால் மாசுபடுதல் குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும்.

இந்த பணியை இலவசமாகவே செய்கிறோம். மரக்கன்றுகள் இலவசம். முதல் சில வருடங்களுக்கு இலவச பராமரிப்பும் செய்கிறோம். குறைந்த பட்சம் 5 சென்ட் பயன்படுத்தாத இடம் தேவை. அதிகமாக எத்தனை பெரிய இடமாக இருந்தாலும் நலம்.

இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் இப்பணியை இலவசமாக செய்ய காத்திருக்கிறோம்.

தாய் மரம் உருவாக்க இணைந்து பணியாற்ற விரும்பினாலும் இத்திட்டத்தை பற்றிய மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும் மின்னஞ்சல் செய்யுங்கள்
Karthicktours@gmail.com
தொலைபேசி : +91 9944 1 333 55

Sunday, 10 February 2013

36 மணி நேரத்தில் ஈக்கள்

















அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா?,,,,,?????

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?

பிராத்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்.....
பிராத்தனை செய்ய முடியவில்லையா ...?
அதற்க்கு பதிலாக சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்.... 

- அன்னை தெரசா
நன்றி - தமிழால் இணைவோம்

Friday, 8 February 2013

மரணம் இப்படித்தான் இருக்குமா...? (3)

ஐரோப்பிய பெண்மணியின் அனுபவமும் அரேபிய இளைஞன் இந்தியச் சிறுவன் ஆகியோரின் அனுவங்கள் மட்டுமே இங்கு கூறப்பட்டதற்கு முக்கியமாக காரணம் உண்டு. இன்று உலகில் இருக்கும் கலாச்சாரங்களில் முக்கியமானது இந்து இஸ்லாம் கிருஸ்துவ கலாச்சாரங்களே ஆகும். அந்தந்த கலாச்சராத்திற்கு உட்பட்ட மனிதர்களின் எண்ண ஒட்டங்களும் தங்களது சுய கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே அமையும் என்பது உலக நியதி. அதன் அடிப்படையில் இந்த அனுபவங்களைக் தொகுத்து பகுத்து பார்க்கும்போது காலதேச சூழநிலையில் அனுபவசாலிகளின் தன்மைகள் மாறுபட்டு இருந்தாலும் அவர்கள் கூறும் விஷயத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதை அறிய முடிகிறது.


செத்துப்பிழைத்த மூன்று பேருமே தங்களை மூன்று நபர்கள் வந்து அழைத்ததாகவும் தங்களது பூத உடலைத் தாங்களே பார்த்ததாகவும் மீண்டும் உடலுக்குள் உயிர் நுழையும் போது சிறய அளவில் வேதனையையும் பயத்தையும் அனுபவித்ததாகவும் கூறுகிறார்கள். இது எதேச்சையாகக் கூறப்பட்ட விஷயங்களாகக் கருத இயலாது. இவர்களைத் தவிர மீண்டும் உயிர்பெற்ற பலரும் ஏறக்குறைய இதே மாதிரியான அனுபவங்களைத் தான் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் இன்னும் பல நவீன கருவிகளின் வளர்ச்சியும் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில் ஒருவரைப் போல் மற்றொருவர் கற்பனை செய்து கொள்வதும் திரித்துக் கூறுவதும் இயற்கையான விஷயம் தானே அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று சிலர் எண்ணக் கூடும். ஆனால் அந்த எண்ணம் நியாயமானது அல்ல. கராணம் தகவல் தொழில் நுட்பம் என்பது இல்லாத ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்னரே இந்த மாதிரியான அமானுஷ்ய விஷயங்களிலும் உலக அறிவைப் பற்றிய ஒற்றுமையான கருத்துக்கள் கூறப்பட்ட இருக்கிறது அவைகளை தற்செயலாக நிகழந்தவைகள் அல்ல என்பதை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டால் மேலே குறிப்பிட்ட மூன்று அனுபவங்களும் உண்மைக்குப் புறம்பானவைகள் அல்ல என்பது தெரியவரும்.
பல லட்சம் வருடங்களுக்கு முன்பு தற்போது தனித்தனியாக உள்ள ஆஸ்திரேலியா அண்டார்ட்டிகா தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தது என்றும் அதற்கு பெயர்தான் லெமூரியா கண்டம் என்றும் புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள் தொடர்ச்சியான மிகப்பெரும் கடல் கோள்களால தாக்கப்பட்டு அந்தக் கண்டம் பல கூறுகளாகப் பிரிந்து விட்டது என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதற்கு ஆதாராமாக ஆஸ்திரேலியா அண்டார்டிகா கண்டங்களில் உள்ள மலைத் தொடர்களின் அமைப்புகள் ஒரே மாதிரி இருப்பதாகவும் அதற்கு இரு கண்டங்களில் உள்ள கற்களின் அமைப்பை நுண்ணியமாக ஆராய்ந்த பின்பே இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

லெமுரியா கண்டம் இருந்ததற்கான ஆதாரமும் அது மிகப் பெரும் கடல் சீற்றத்தால் அழிந்து போய் இருப்பதற்கான ஆதாரமும் 19ம் நூற்றாண்டில்தான் கிடைத்தது என்று பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கூறினாலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே மிகப்பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டு பெரும் நிலப்பரப்பு ஒன்று அழிந்து போனதாக பாரதத்தின் புனித மிக்க பல நூல்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றைப் பற்றி சிறிது பார்போம்.

மாபெரும் ஜலப் பிரளயம் பூமியில் ஏற்பட்டது. உலகெங்கும் உள்ள உயிர்கள் நீரில் மூழ்தி அழிந்த போது விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து மனுவையும் மற்றைய ஜீவன்களின் ஒவ்வொரு ஜோடியையும் ஒரு பேழையில வைத்து ரட்சித்ததாக மச்ச புராணம் கூறுகிறது. மேலும் இந்தக் கடல் கோள் பற்றி அதர்வண வேதத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதர்வண வேதத்தில் கூறப்பட்டு இருக்கின்ற கருத்துக்களே சுமேரியர்களின் பிரளயக் கதையாக இருக்கிறது என்று டாக்டர் ஹேன் என்பவர் சுறுகிறார். வேத நூலில் பிரளய காலத்தில் சத்ய வரத மனு என்பவர் உயிர்த்தொகுதிகள் அழிந்து போகாமல் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
பாகவத்தில் கடல்கோள் பற்றி வேதத்திலும் மச்சபுராணத்திலும் கூறப்பட்ட விஷயங்களே இருந்தாலும் உயிர் வகைகளைக் காப்பாற்றியது திராவிட பதி என்ற குறிப்பு உள்ளது. சத்ய வரத மனுவைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும்போது அவன் பொதிகை மலையில் தவம் செய்தான் என்று இருக்கிறது. திராவிட பதியும் பொதிகை மலையில் தான் இருந்தான் என்று பாகவதம் கூறுகிறது. எனவே இந்த இரண்டு பெயர்களும் ஒரே நபருக்கு உடையதுதான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி உள்ளது.

தொல் பழமை காலத்தில் புகழ் பெற்ற நகரமாக விளங்கிய பாபிலோனில் ஜலப்பிரளயத்தைப் பற்றி ஒரு கதை உண்டு. அது கி.மு. 300ம் ஆண்டுதான் எழுத்து வடிவம் பெற்றது. பெரோஷஸ் என்பவர் இதை எழுதி வைத்தள்ளார். அதில் அணு என்பவன் பிரளயத்தின் போது உயிர்களை ரட்சித்து பாபிலோனியர்க்கு விவசாயம் செய்வது உட்பட நாகரீகங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுத்ததோடு மனிதத் தலைமுறைகளின் சட்டதிட்டங்களையும் வகுத்துக் கொடுத்தான் எனக் கூறப்படுகிறது. வேதங்களில் வருகின்ற மனுவிற்கும் பெரோஷஸ் நூலில் குறிப்பிடப்படும் பிரளய காட்சிக்கும் அதிக வித்யாசம் இல்லை.

தென் அமெரிக்க நாட்டின் நடுப்பகுதியில் இன்கா என்ற பெயரில் பழங்குடி மக்கள் சிறிய குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
 

Thursday, 7 February 2013

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


Painfull word
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!


முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!


இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது


நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.
நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

சிந்திக்க வேண்டிய விடயம்...!

சிவ சிவ சிவ
 சிந்திக்க வேண்டிய விடயம்...!
1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்



நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா போடுவோம்...

அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.

அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.

சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவர் வியர்வைக்கு முன் மண்டி இடும்...! —



Wednesday, 6 February 2013

ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய்!

ஏக்கருக்கு ரூ.1 கோடி... செழிப்பான வருமானம் தரும் செஞ்சந்தனம் ! 

இறவை, மானாவாரி இரண்டுக்கும் ஏற்றது. 
ஏக்கருக்கு 400 மரங்கள். 
20 ஆண்டுகளில் மகசூல். 

சுனாமி போன்ற கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்துக்கு ஏற்ற மரம் என்றுகூட செஞ்சந்தன மரத்தைச் சொல்லலாம்.

பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர்... போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள், சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்களாம். ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்தாது. இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதைப் பற்றி பார்ப்போமா...

சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில்கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம். ஆழமான மண்கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம். விதைகளை விதைப்பது; நாற்று தயாரித்து நடவு செய்வது; போத்து நடவு என மூன்று வழிகளில் இம்மரத்தை நடவு செய்யலாம் என்றாலும், கடைசி இரண்டு முறைகள்தான் சிறந்தது.
கட்டாயம் செய்யணும் கவாத்து!

10 அடி இடைவெளியில் குழி எடுத்து, வழக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்வதுப் போல இயற்கை உயிர் உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். மெதுவாகத்தான் இந்த செடிகள் வளரும். நன்கு வளர்ந்து வராத செடிகளை சில நாட்களிலேயே கண்டறிந்து அகற்றிவிட வேண்டும். மானாவாரி, இறவை என இரண்டு முறைகளிலும் இதைப் பயிரிடலாம். இறவையில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம்.

அவ்வப்போது செடிகளுக்கு சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாக செடிகளைச் சுற்றிலும் மண்ணைக் கொத்திவிட வேண்டும். இம்மரங்களை பழத்தோட்டங்களில் காற்றுத் தடுப்புக்காகவும் நடவு செய்யலாம். பல இடங்களில் எலுமிச்சைத் தோட்டங்களில் செஞ்சந்தன மரங்களை காற்றுத் தடுப்பு அரணாகப் பயன்படுத்துகிறார்கள்

ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய்!

இந்த மரத்தின் வைரம் பாய்ந்த பகுதி கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 20 ஆண்டுகள் ஆன ஒரு மரம், வளர்ச்சியை மற்றும் அதன் தரத்தைப் பொறுத்து அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை விலை போகும். ஒரு ஏக்கரில் 400 மரங்கள் நடவு செய்து...

அதில் 100 மரங்கள் மட்டுமே நன்றாக விளைகின்றன என வைத்துக் கொள்வோம். ஒரு மரம் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய்க்கு விற்றாலே... ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். கடந்த 2010-ம் வருடம் நவம்பர் 25-ம் தேதி திருப்பத்தூர் அரசு சந்தனக்கிடங்கில் நடந்த ஏலத்தில் ஒரு டன் 'சி’ கிரேடு செஞ்சந்தன மரம், 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிருக்கிறது.
அனுமதி தேவையில்லை!

சந்தன மரத்தைப் போல இம்மரங்களை வெட்டுவதற்கு தனி அனுமதி எல்லாம் வாங்கத் தேவையில்லை. மற்ற மரங்களைப் போலவே வெட்டி விற்று விடலாம். இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில்தான் இந்த மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஜப்பான், தைவான், சீனா... போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகம் உள்ளதால், சந்தை எப்போதும் சரியாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சந்தனத்துக்கு இணையான மதிப்புள்ளதால், இந்த மரங்களும் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்படுகின்றன என்பதும் கவனத்தில் இருக்கட்டும்.
மானாவாரியிலும் மகத்தான வளர்ச்சி!
செஞ்சந்தனத்தை இரண்டு ஏக்கரில் மானாவாரியாக சாகுபடி செய்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தைச் 'சாலை' சிவச்செல்வன் சொல்வதைக் கேளுங்கள்.

''எங்களோடது செம்மண் பூமி. இதுல மரம் வளர்க்கணும்ங்கற ஆர்வத்தை ஏற்படுத்தினதே வனத்துறைதான். எங்கப்பா வேளாண்துறையில இணை இயக்குநரா இருந்து ரிட்டையர்டு ஆனவர். அவரும் நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கார்.

மானாவாரியா ரெண்டு ஏக்கர்ல சந்தனம், வேங்கை, மகோகனி, ஆவி, ரோஸ்வுட்னு பல வகையான மரங்களை நட்டிருக்கோம். தனியா ரெண்டு ஏக்கர்ல செஞ்சந்தனத்தை மட்டும் சாகுபடி செஞ்சுருக்கோம். நடவு செஞ்சு 3 வருஷமாச்சு. இந்த மண்ணுக்கு செஞ்சந்தனம் நல்லா வளருது.

இதுவரைக்கும் நாங்க பாசனம்னு தனியா செய்ததில்ல. செஞ்சந்தனத்தைப் பொறுத்தவரை மரங்கள்ல கிளையடிக்க விடக்கூடாது. அப்பப்ப கவாத்து செஞ்சுடணும். இந்த மரத்துக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க. ஆனா... அறுவடை செய்றப்பதான் இதோட விலை தெரியும்.''
டன் ஐந்து லட்சம்!

அறுவடைக்குத் தயாரான செஞ்சந்தன மரங்கள், அதே மாவட்டத்தில் உள்ள 'மரம்' தங்கசாமியின் தோட்டத்தில் இருக்கின்றன. அதைப் பற்றி தங்கசாமியின் மகன் கண்ணன் சொல்வதையும் கேட்போமா..!

''எங்க அப்பா 20 வருஷத்துக்கு முன்ன வீட்டைச் சுத்தி இருந்த இடத்துல எல்லாம் சந்தனம், செஞ்சந்தனம், தேக்குனு பல வகையான மரங்களைக் கலந்து நடவு செஞ்சாரு. அதுல 100 செஞ்சந்தன மரங்க இருக்கு. மரங்க நல்லா வளந்து இருக்கு.

டன் அஞ்சு லட்சம், ஆறு லட்சம்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா, நாங்க இன்னும் விக்காம வெச்சிருக்கோம். அன்னிக்கு எங்க அப்பா விளையாட்டா வெச்ச மரம் இன்னிக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள மரங்களா மாறியிருக்கு!''

என்ன... செஞ்சந்தனத்தை நடவு செய்யக் கிளம்பிவிட்டீர்களா?



Saturday, 2 February 2013

ஒரேமொழியில் படித்து, எழுதி, பேசினால்


உலகில் உள்ள அணைவரும் ஒரேமொழியில் படித்து, எழுதி, பேசினால் எப்படி இருக்கும் ?

அப்படி ஒரேமொழி பயன்படுத்துவதை வரவேற்கலாமா?

வரவேற்கவேண்டும் என்பதுதான் எனது அபிப்ராயம்

அப்படி நடந்தால் உண்டாகும் சாதக பாதகங்கள் என்ன ?

பதில் பண்ணுங்க plz ...




1. மொழி வெறி, மொழிச்சண்டைகள் தவிர்க்கப்படும்.
2. அறிவு பகிர்வு ஈஸியா நடக்கும்.
3. ஒரு சாதாரண வியாபாரி கூட ஈசியா ஏற்றுமதி /இறக்குமதி செய்வார்.

4. அடிப்படைகல்வி ஒரு மொழியில் (தமிழ்) படிச்சிட்டு பட்டப்படிப்பு இன்னொரு மொழியில் (இங்கிலீஷ்) படிக்கமுடியாமல் நிகழும் தற்கொலைகளை தவிர்க்கலாம்.

உலகம் முழுவதும் ஒரே எண் வடிவங்கள் (அரபு எண்கள் 1,2,3..) பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் (தேதி, கரண்சி, வாகன எண்கள் இவற்றில் ஏற்படும் நன்மை) அனைத்திலும் ஏற்படும். தேதி, கரண்சி, வாகன எண்கள் அந்தந்த மாநில மொழியில் இருந்தால் தொழில், அறிவு பகிர்வு இவற்றில் எவ்வளவு குழப்பமாக இருக்கும்... .

இவற்றுக்கெல்லாம் ஒரேத்தீர்வு உலகில் உள்ள அணைவரும் ஒரேமொழியை ஏற்று ஒரேமொழியில் படித்து, எழுதி பேசுவதுதான்.

இந்த கருத்து சரி என தங்களுக்கு தோன்றினால் பகிர்வும்

இலங்கையில் பெய்த சிவப்பு மழை, வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதற்கான ஆதாரம்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


இலங்கையில் பெய்த சிவப்பு மழை, வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதற்கான ஆதாரம்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
[ சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013, 03:42.27 PM GMT ]
பொலன்னறுவை - அரலகங்கவில பிரதேசத்தில் அண்மையில் கிடைக்கப்பெற்ற விண்கல்லின் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்த சிவப்பு மழையிலும் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான உறுதிப்பாடுகள் தென்படுவதாக நாசா நிபுணர் தெரிவித்துள்ளார்.
சிவப்பு மழை மற்றும் விண்கல் பகுதிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நாசா நிறுவனத்தின் நிபுணர் பேராசிரியர் சந்ரா விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவருடன் பேராசிரியர் ரிச்சட் பீ ஹுவர் ஆகியோர் நேற்று மாலை சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்கவை சந்தித்துள்ளனர்.
அதன்போது, இதுவரை இடம்பெற்ற பரிசோதனைகள் தொடர்பான முன்னெற்றம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிவப்பு மழை உட்பட ஏனைய பகுதிகளில் பல வர்ணங்களில் பெய்த மழை தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சினால் ஏற்கனவே
அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான இயற்கைக்கு மாறான மழை வீழ்ச்சி காரணமாக பொது சுகாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதே இந்த ஆய்வின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மழையின் நீர் மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவற்றில் நுண்ணுயிர்கள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரலகங்வில பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட விண்கல் பகுதிகளிலும், சிவப்பு மழையிலும் உள்ள ஒற்றுமை குறித்து நாசா நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
நவீன தொழினுட்ப உபகரணங்களை பயன்படுத்தி சோபோன் மற்றும் காடிஸ் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய குறித்த விண்கள் மாதிரிகளில் உள்ள நுண்ணுயிர்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அழிந்து போன உயிரினங்கள் என தெரியவந்துள்ளது.
இது பூமிக்கு வெளியில் அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று புகழ்பெற்ற நட்சத்திர ஆய்வாளரான ஸ்ரீமத் பெஃட் ஹொயில் முன்வைத்துள்ள பென்ஸ்பர்மியா அடிப்படை கொள்கை இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள நாசா நிபுணர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் கடந்த 500 வருடங்களுக்குள் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரகங்கவிலயில் விண்கல் பகுதிகள் வீழ்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருந்தபோதும், பொலன்னறுவை - அரலகங்வில பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற விண்கல் பாசானத்தில் வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதை கண்டறிய முடியவில்லை என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அத்துல சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.