Thursday, 28 February 2013

சில மறைந்திருக்கும் உண்மை கோட்பாடுகள்....

சில மறைந்திருக்கும் உண்மை கோட்பாடுகள்....
இந்து மதமும் பகவத் கீதையின் கூற்று: 

நீயும் உன் குடும்பத்தாரும் இறைவனின் வழிபாட்டுக்காக வரும் நல்ல நாட்களில் விரதம் இரு! அப்போது உன் வீட்டில் அன்றைய தினம் சமையலுக்கு (சைவ உணவு) தேவைப்படும் உணவுப்பொருட்களை நீயும் உன் சுற்றத்தாரும் ஒரு கோவிலில் அந்த உணவுப்பொருட்களை சமைத்து அன்று மாலை ஏழை எளிய மக்களுடம் அந்த உணவை ஒரு நேரம் மட்டும் சேர்ந்து சாப்பிடு இதுதான் விரதம்!

இசுலாம் சொல்கிறது:

நீ இசுலாத்தின் கடமைகளாக வரும் நல்ல நாட்களில் பகல் நேரம் சாப்பிடாமல் இரவு வேளை மட்டும் சாப்பாடு சமைத்து வறியவர்களையும், ஏழைகளையும் சேர்ந்து உன் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு நேரம் சாப்பிடு!

சிக் மதம்:

நீ பணக்காரனாக இருந்தால் ஏழைகளை அழைத்து ஒன்றாக சாப்பிடு! நீ பணக்காரனாக இருந்து கொண்டு நீ மட்டும் சாப்பிட்டு விட்டு ஏழைகளை பட்டினி போடாதே!

கிறிஸ்தவம்:

பணம் படைத்தவர்களிடம் பணம் பெற்று கிறிஸ்துவின் பெயரால் ஏழைகளுக்கு உணவளி!

பௌத்தம்:

புத்தனின் பெயர் சொல்லி வாறவர்களை அன்போடு ஆணை அவர்களுக்கு பசியோ தாகமோ எடுத்தால் இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு சற்றேனும் உணவும் தாகத்துக்கு தண்ணீரும் உறங்குவதற்கு இடமும் குடு!

இதில் எல்லா வர்க்கத்திலும் இன்றைய உலகம் எப்படி மாறி நடக்கிறது என்று சற்று எண்ணி பாருங்கள்.
- சிவம் கண்டர்

விளக்கேற்றும் பலன்கள்

விளக்கேற்றும் பலன்கள்
----------------------------------
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்

யாருக்கு என்ன எண்ணெய் (விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)
-----------------------------------------------------------------------------------------------
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
எண்ணையும் அதன் பயன்களும்

விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

தீபம் ஏற்றும் திசைகள்
-------------------------------
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
----------------------------------------------------------------------
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது

திரிகளும், பயன்களும்
-------------------------------
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

வாளம் பெருக்கும் அகல்:
-----------------------------------
கார்த்திகை மதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.

இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம்.

அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு.

வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு

Add captionDEEPAM..MAHIMAI

இந்தியாவில் ....

இந்தியாவில் ....

கல்வி ::
வியாபாரம் ஆகிப்போனது ...L KG தொடங்குது

அரசியல் ::
பணம் அருவி போல் கொட்டும் இடம்

கோவில்கள் ::
கடவுளை சிறையில் வைத்து விட்டு
பணம் பண்ணும் இடம்

மருத்துவம் ::
ஐயோ ...சொல்லவே வேண்டாம்
சொத்து இருந்தால் நோய் வரலாம்
இல்லாதவன் ..நேரடியாக கிழே
சொல்லும் இடத்துக்கு சென்று
படுத்து கொள்ளலாம் ...

அது ::

ஆண்டியும் இங்கே
அரசனும் இங்கே
அறிஞன் இங்கே
அசடனும் இங்கே

சேவை செய்யும் தியாகி
சிருங்கார போகி
ஈசன் பொற் பாதம் தன்னை நாடிடும் யோகி

எல்லோரும் ஒன்றாய் இங்கே
உறங்குவார்கள்

ஆவி போன பின் சேருவார் இங்கே

இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே ...

சமரசம் உலாவும் இடம் !!!!!..........

courtesy: pon gnana moorthy...facebook

Monday, 25 February 2013

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
(குப்லாய் கான்)
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

திருவடி தீட்சை

மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

திருவடி தீட்சை

தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.

தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

ஒரு ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின் தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும்.

திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்:
“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”
திருமந்திர பாடல் – 2816

விளக்கினை பிளந்து விளக்கினை ஏற்றி – இங்கு திருமூலர் நமது உடலில் விளக்கான கண்ணை பிளந்து ஏற்ற பட வேண்டும் என்கிறார். ஏன் பிளக்க வேண்டும்? எதனால் பிளக்க வேண்டும்?

நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.

தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.

தீட்சையின் போது முதலில் நம் புற கண்ணை திறந்து குருவின் கண்ணை பார்க்க வேண்டும். தீட்சை பெற்ற பின் கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண் திறந்து கண்மணி உணர்வை பற்றி தவம் செய்தால் தான் கண் ஒளி பெருகும்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம் ஜீவ ஒளியும் , புற ஒளியும் ஒன்றல்ல. நம் ஜீவா ஒளியை தகுதி பெற்ற சற்குருவின் ஜீவ ஒளியை கொண்டு தான் தூண்ட முடியும். வேறு எந்த புற ஒளியை கொண்டோ வேறு எதனாலோ தூண்ட முடியாது.

இதுவே தீட்சை. தீட்சையின் மூலம் வள்ளல் பெருமான் நம்முள் வந்து , நம் உடனிருந்து வழி நடத்தி , தவம் செய்ய துணை புரிந்து நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.

இறைவனை அடைந்த எல்லா சித்தர்களும் , ஞானிகளும் இவ்வாறே தீட்சை பெற்றனர். தங்கள் கண் ஒளியை பற்றியே தவம் செய்து தன்னை உணர்ந்து இறைவனை உணர்ந்தனர்.

நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.

தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.

மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

தீட்சை பெற வேண்டிய தகுதிகள்:

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.
இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் குருவை வணங்கி தீட்சை பெறலாம்.

Saturday, 23 February 2013

நட்சத்திர உழைப்பாளி திரு.தசரத் மான்ஜி..!

தனி ஒருவராய் மலை பாதை அமைத்த நட்சத்திர உழைப்பாளி திரு.தசரத் மான்ஜி..! இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.
                         
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட, மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். 

இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. 

கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். 

மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் மலையை உடைத்து பாதையை 1981 ஆண்டு முடித்தார். 

60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். 

வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.  

Friday, 22 February 2013

உங்கள் வகையில் ஆலயதீப கைங்கர்யம்

Support Us

சிவாய நம:
யார் வேண்டுமானாலும் இந்த தெய்வீக திருப்பணிக்கு உதவ முடியும். ஆங்காங்கே இருப்பவர்கள் எண்ணெய் வாங்கியும் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் பணமாக செலுத்தவும் முடியும். பணம் செலுத்த வேண்டிய account விவரங்கள் கீழ்க்கண்டவாறு:
Account Name:  GIRIDHARAN M
Bank Name:  STATEBANK OF INDIA
Branch :  SAIBABACOLONY BRANCH(4792)
Savings Bank Account No:  11200621292
Inform us Via email the date and amount of the deposit and your name and address immediately for us to send the acknowledgement.
or Contact  GIRIDHARAN M (MOBILE:7200086562)