Saturday, 2 February 2013

பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும்...
'ரோபாட்' காலணி!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள 'ரோபாட் காலணி' யை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம், 'தானே'யைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள்.
''இந்த காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார சுற்று பொருத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால் காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம் கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது, காலணியில் பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும். மேலும், ப்ளூடூத் சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும் செய்யும். விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும் பொருத்தப்பட்டிருகிறது.. அது, அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு செய்யும். பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு பிரத்யேக தயார் நிலைக்கு இடையே, எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள், சிறந்த பாதுகாப்பு ஆயுதம்! '' என்கின்றனர், இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். இவர்கள், 9 - ம் வகுப்பு மற்றும் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 1 February 2013

bloom box

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடுகவனிக்கப்பட்டு வரும் பெயர்.
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம்அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.)மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையானசாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது,ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகிவெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கிஇருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில்மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமானகிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள்போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம்,ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார்ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித்தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவுபெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்டஎட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்‘ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார்.இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம் அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்‘ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்”என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்‘ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையானமின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்‘ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட்மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்றபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்‘ இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில்சந்தேகமில்லை

பூவரசம் பூக்கள்.

Photo: சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்..!

பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு..!

பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை. 

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும். 

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். 

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது.

சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்..!

இது பெண்களுக்கு மட்டுமல்ல..

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....
எச்சரிக்கைச் செய்தி. . . .
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப ் பகிரவும்..
எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..
அவர் தன்னுடைய Cellphoneல்,
மாதாமாதம் தவறாமல் 98ரூப
ாய்க்கு Recharge செய்து
Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
(குறிப்பாக exbii)
ஒருநாள்,
அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'
என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிற ார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக ்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...
ஆம்...!
அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றியஅருவருப்பான commentகளும்..
நன்றாக யோசித்துப் பாருங்கள்...
ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமெ ன்று..!
தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர்
இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க,
அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..
ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..
(அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)
மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி..
அண்ணா..
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...
அப்போதுதான் அவருக்கு உறைத்தது..
Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacysettingsல் கொடுத்தது..
அதன்பிறகு,
உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண ்டார்..
இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது. .
இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால்,
இந்த Facebook இன்றைய இளையசமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதெ ன்று எல்லோருக்கும் தெரியும்..
இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல ்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் இணைய உலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவே ண்டும்..
இதற்கு,
நமது பெண்கள் செய்யவேண்டியதெல ்லாம்
ஒன்றே ஒன்றுதான்..
முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது'
(friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டு ம்ஏற்றுக்கொள்ளவேண ்டாம்..
ஏனெனில்,
உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள். .
அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையெ ன்றால்,
உங்களது உண்மையான படங்களைஎக்காரணங்கொண்டு ம் இங்கே பதிவேற்றாதீர்கள ்..
இதுதான் மிகச்சிறந்தவழி. .
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..
இது பெண்களுக்கு மட்டுமல்ல..
எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம ் விளக்கமாக எடுத்துரையுங்கள ்..
பொழுதுபோக்கிற்க ாக உலாவ வரும் பெரும்பாலோனோருக ்கு,
இங்கே பல புறம்போக்குகளும ் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கே இதை கைவலிக்க எழுதியுள்ளேன்..
தயவுசெய்து மற்றவர்களுக்கும ் பகிருங்கள்..
நன்றி..!
பின்குறிப்பு:
இதை எனது நண்பரின் அனுமதியுடனும்,
அவர் பட்ட வேதனையைப்போல
எந்த அண்ணனும் படக்கூடாதுஎன்று அவர் விரும்பியதால்
இதனை இங்கே பதிந்துள்ளேன்..

Photo: இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....

Wednesday, 30 January 2013

செந்தூர்பாண்டி

செந்தூர்பாண்டி

இவர் யார் ? என்ற விடைக்கு கீழே படியுங்கள்...

ஒரு சோக நிகழ்வின் தொடர்ச்சியாகத் தான் பாண்டி எனக்கு அறிமுகமானார். அன்பு நண்பர் அந்தோணி 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காலமானபோது தான். அந்தோணிக்கு தமிழ் வலையுலக நண்பர்கள் உதவியுடன் வாங்கிக் கொடுத்து இருந்ததானியங்கி சக்கர நாற்காலியை என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அந்தோணிக்குத் தெரிந்த பாண்டிக்கு அதை வழங்க, நண்பர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தேன். பாண்டி பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது கால்கள் செயலிழந்து விட்டன என்று கேள்விப்பட்டேன். சற்றே பழுதடைந்திருந்த சக்கர நாற்காலியை பழுது பார்த்து பாண்டிக்கு கொடுத்தேன். பாண்டிக்கு மிகவும் சந்தோஷம்.

பாண்டியின் கால்கள் செயல் இழந்திருந்தாலும், அவரது கைகளில் அற்புதமான திறமை ஒளிந்திருக்கிறது. மிக நேர்த்தியாக ஓவியங்கள் வரைகிறார்.

அவரது சில ஓவியங்களை சில அன்பர்கள் வாங்கி அவருக்கு பொருளுதவி செய்திருக்கின்றனர் என்று அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கேமராவில் படம் பிடித்த சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.

அவ்வப்போது, பாண்டிக்கு முடிந்த அளவில் உதவிகள் செய்து வருகிறேன். ஆனால், அவராக எதுவும் என்னிடம் கேட்டதில்லை. கை தொலைபேசி பழுது பார்ப்பதற்குரிய தகுதி கிடைக்கும் (தமிழக அரசு நடத்திய) இலவச பயிற்சி வகுப்பில் பாண்டி சேர்ந்து தேர்ச்சியும் பெற்றார். வீட்டில் இருந்தபடியே சுயவேலை பார்த்து கொஞ்சம் சம்பாதித்து வந்தார். தனது சுய சம்பாத்தியம், கொஞ்சம் கடன் என்று ஒரு சிறு கைதொலைபேசி பழுது பார்க்கும் கடையை தனது வீட்டுக்கு (ரெட் ஹில்ஸ்) அருகில் சமீபத்தில் அமைத்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பாண்டிக்கு ஏதாவது வகையில் உதவ விரும்பினால், அவரை/என்னை தொடர்பு கொள்ளும்படி இட்லிவடை வாசகர்களை வேண்டுகிறேன்.

M.SENTHUR PANDIAN
NO,5/269 VEERAMAMUNIVAR STREET M.A NAGAR STREEET
REDHILLS CH-52
PHONE NO - 9940512774

அவரது வங்கிக்கணக்கு எண்:

M.SENTHUR PANDIAN
INDIAN BANK ACCOUNT NO -977780556
RED HILLS BRANCH

- எ.அ.பாலா

பிகு: பணம் அனுப்பும் நண்பர்கள், விவரங்களை (தொகை, தேதி, பெயர்) balaji_ammu@yahoo.com என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம்.

தன்னம்பிக்கை !